கிளிநொச்சியில் 20 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 20 கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 15 பேர் வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்தவர்கள் என்றும், ஏனையவர்களில் இரண்டு பேர் ஜெயபுரத்திலும், ஏனையவர்கள் உருத்திரபும், சிவபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முதல் வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தலுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 48 பேர்
கோவிட் 19 தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
