விமல் வீரவங்சவின் மனைவிக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை! தாக்கல் செய்யப்பட்டது மேன்முறையீட்டு மனு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீடு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீரவன்சவின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டதை அடுத்தே இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சஷி வீரவன்ச வழக்கு விடயத்தில் விமல் வீரவன்சவின் அரசியல் பேரம்! வாக்கெடுப்பில் பங்கேற்காமை தொடர்பில் வெளியான காரணம்! |
குற்றச்சாட்டு
போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளுடன் ஆவணங்களை சமர்ப்பித்தமை தொடர்பில் சஷி வீரவன்ச முதன் முதலில் 2015 பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
