சஷி வீரவன்ச வழக்கு விடயத்தில் விமல் வீரவன்சவின் அரசியல் பேரம்! வாக்கெடுப்பில் பங்கேற்காமை தொடர்பில் வெளியான காரணம்!
சஷி வீரவன்சவின் வழக்கை ஒத்திவைத்ததன் மூலம் மேற்கொள்ளப்படும் அரசியல் பேரத்தின் காரணமாகவே புதிய சபாநாயகர் தெரிவின்போது விமல் வீரவன்ச வாக்களிக்க வரவில்லை என்று நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இந்தக்குற்றச்சாட்டை சுமத்தினார் எதிர்கட்சி் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார், வர்த்தகர் திருநடேசனை சந்தித்ததாக வெளியான தகவலை மறுத்தபோதே சமிந்த விஜயசிறி, விமல் வீரவன்சவின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நாள் ஒன்றுக்கு 80 லட்சம் ரூபா செலவாகிறது.
எனினும் இந்த 80 லட்சம் ரூபாவை கொண்டு எந்த பயனும் ஏற்படவில்லை என்று சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டின் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் என்ற நிறுவனங்கள் பழைய கொள்கைகளை கொண்டு செல்கின்றன என்றும் எனவே இந்த இரண்டுக்கும் அப்பால் சென்று தீர்வுகளை காணவேண்டும் என்று காலிமுகத்திடம் போராட்டக்கார்கள் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
