யாழில் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் நேற்று(27.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சாவகச்சேரி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கன்னாதிட்டி பகுதியில் கடந்த 14ஆம் திகதியன்று சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது கைத்தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில் நின்றவர் அதனை எடுத்து சென்றுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் கைத்தொலைபேசியை தொலைத்த இடத்தில் தேடிய நிலையில் தொலைபேசி காணாததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சீசீடிவி கெமராவின் உதவியுடன் குறித்த நபரை இனம் கண்டு மேற்கொண்ட விசாரணையில் அந்த கைத்தொலைபேசியை இன்னொருவருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், கைத்தொலைபேசியை கொள்வனவு செய்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசியானது 76,000 ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் யாழ். நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |