கிளிநொச்சியில் இரண்டு சிங்கள மாணவர்கள் கைது!
கிளிநொச்சி- அறிவியல் நகர் பகுதியில் இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(25.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த பிரிவினர் ஓர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதன்போது, ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடமையிலிருந்து குஸ் வகை போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென்னிலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடமையில் 1 கிராம் குஸ் பேதைப்பொருளும் மற்றைய மாணவரின் உடமையில் 710 மில்லி கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri