உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.. இப்ராஹிம் குடும்பத்தின் தங்க நகைகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிம் இல்ஹாமின் தெமட்டகொடை மஹவில கார்டன்ஸ் இல்லத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் மாணிக்கக்கற்களை ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, இன்று (25.02.2025) உத்தரவிட்டார்.
பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்
சிஐடியினருக்கு எதிராக நடவடிக்கை
சந்தேக நபருடைய சகோதரரான இஃப்லால் அஹமட் என்பவருக்கு ஒருவார காலத்திற்குள் இந்த சொத்துக்களை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தியதற்காக குற்றப்புலனாய்வு பிரிவை நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றத் தவறினால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் குறிப்பிட்டார்.
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam