தெதுருஓயா நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவர் மாயம்
சிலாபம், தெதுரு ஓயாவில் இன்று (1) பிற்பகல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள் காணாமல் போயுள்ளனர்.
நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று யுவதிகள் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு இளைஞர்கள்
கண்டி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட மூவரும் இளம் யுவதிகள் எனவும், அதே பல்பொருள் அங்காடியில் பணிபுரிபவர்கள் எனவும் தெரியவருகிறது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்பொருள் அங்காடியை மூடிவிட்ட அதன் உரிமையாளரும் ஊழியர்களும் இந்த சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் முதலில் சிலாபம் கடற்கரைக்குச் சென்றதோடு, பின்னர் இந்தக் குழு தெதுரு ஓயாவிற்கு சென்றுள்ளது.
மூன்று யுவதிகள்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீராடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போது அவர்களில் ஐவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன் போது மூன்று யுவதிகள் காப்பாற்றப்பட்ட நிலையில், இரண்டு வாலிபர்கள் காணாமல் போயுள்ளனர்.
பிரதேசவாசிகளின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நீண்ட நேரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் கடற்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
