ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பில் ஐ.எம்.எப் விதித்துள்ள நிபந்தனை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஏனைய, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய கூடுதல் முன்னேற்றங்களின் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, இதனை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க
இலங்கை ஏர்லைன்ஸின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் மரபுவழி கடனைத் தீர்ப்பதற்கும் ஒரு நடுத்தர கால மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பாதீட்டில், விமான நிறுவனத்தின் கடனில் சிலவற்றை அடைக்க 20 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க ஒரு நிதி ஆலோசகரையும் நியமித்துள்ளது.
அந்நியச் செலாவணி
ஆனால் இந்த நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வைப் பெற இவை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கைக்கான செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அவற்றின் நிலுவையில் உள்ள மரபுவழிக் கடனைத் தீர்க்கவும் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசுக்கு சுமை இல்லாமல் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்துதல், அந்நியச் செலாவணி கடன்களைத் தவிர்ப்பது மற்றும் அவற்றை மேலும் வெளிப்படைத்தன்மையாக்குதல் ஆகியவை, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
