ஸ்பெயினில் தொடருந்துகள் மோதி கோர விபத்து! இதுவரையில் 64 பேர் பலி
புதிய இணைப்பு
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே அமைந்துள்ள டோலிடோ மாகாணத்தில், அதிவேக தொடருந்துகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
மட்ரிட்டில் இருந்து செவில் நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து ஒன்று, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த தொடருந்தின் மீது பின்புறமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய இரண்டு தொடருந்துகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் தொடருந்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி சரிவில் கவிழ்ந்தன.
விபத்தைத் தொடர்ந்து, குறித்த மார்க்கத்திலான அதிவேக தொடருந்து சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
ஸ்பெயின் நாட்டின் தலை நகர் மட்ரிட் நகரை தெற்கு அந்தலூசியா பிராந்தியத்துடன் இணைக்கும் அதிவேக தொடருந்து பாதையில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் 9.00 மணியளவில் இந்த இரண்டு அதிவேக தொடருந்துகளும் மோதிக்கொண்டன.
10 பேர் பலி
இதன்போது ஒரு தொடருந்தின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகின.
காயமடைந்;தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது அன்றாட அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
முன்னதாக, இதே தொடருந்து பாதையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு அதிவேக தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 46 பேர் உயிரிழந்தனர்.
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri