பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது!
பதுளை - கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(24) பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் வசிக்கும் 32 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிராந்துருகோட்டை , அகலஓயா பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தங்க முலாம் பூசப்பட்ட 7 புத்தர் சிலைகள் மற்றும் 7170 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிராந்துருகோட்டை, அகலஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6750 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam