2014 முதல் இலங்கையில் இருந்து 2,835 கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்: ஜெய்சங்கர்
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசாங்கம், இலங்கையிலிருந்து 2835 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நேற்று (19.12.2022) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த விடயத்தில் பல தடவைகள் இலங்கையின் ஜனாதிபதிகளின் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் தலையீடு
இந்த நிலையில் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர்,
தமிழகத்தின் பல்வேறு தரப்பினர்களால், பிரதமருக்கு அனுப்பப்படும் கோரிக்கை
கடிதங்களுக்காகவே, இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுவதாக கூறப்படுவதை
அவர் மறுத்துள்ள்மை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
