2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Harsha de Silva
By Rakesh Jun 03, 2026 10:34 AM GMT
Report

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடியாகப் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், தமக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய அறிக்கையைத் தான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை குழுவின் பரிசீலனைக்காக நாடாளுமன்ற உத்தியோகபூர்வ நடைமுறைகளின் ஊடாகவே முறைப்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்..

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்..

இரகசிய அறிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எமது குழுவினால் ஏற்கனவே உத்தியோகபூர்வமாகப் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

இந்த அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது எனது 'தனிப்பட்ட பார்வைக்காக' மாத்திரம் எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு நடவடிக்கை முறையானது அல்ல என்பதுடன், இதனை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிக்கையானது எனது தனிப்பட்ட தேவைக்காகக் கோரப்படவில்லை, மாறாக அரச நிதி பற்றிய குழுவின் ஒட்டுமொத்தப் பரிசீலனைக்காகவே கோரப்பட்டிருந்தது.

திருப்பி அனுப்ப நடவடிக்கை

நான் மக்களின் பிரதிநிதி என்பதுடன், தற்போது நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மாத்திரமே தற்காலிகமாகப் பணியாற்றுகின்றேன்.

எனவே, இந்த அறிக்கை எமது குழுவினால் விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியதொன்றே தவிர, எனது தனிப்பட்ட வாசிப்புக்கானது அல்ல. இதன் காரணமாக, எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதனை நாடாளுமன்றச் செயலகத்தின் ஊடாகவே திருப்பி அனுப்புவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

பொது நிதி தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கான அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு நாடாளுமன்றக் குழுக்களுக்குக் காணப்படுகின்றது என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆய்வுக் காகக் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக உடன்பட்டுள்ளனர்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள்

இதன்படி, எட்டப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய, அரச நிதி பற்றிய குழுவானது இன்று புதன்கிழமைக்குள் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அறிக்கை கிடைக்கப் பெற்றதும், குழுவின் உறுப்பினர்கள் அதன் உள்ளடக்கங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அடுத்த கட்டக் கலந்துரையாடல்களுக்காக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை | 2 5 Million Financial Fraud Case

நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிமுறைகளை மீறிச் செயற்பட முற்படும் இத்தகைய முயற்சிகள், பொது நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கண்காணிப்பு செயல்முறைகளைக் பலவீனப்படுத்தும்.

குறிப்பாகப் பொது நிதி மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் நிலவும் விவகாரங்களில் இத்தகைய தன்னிச்சையான போக்குகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.   

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US