மேல்மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 2,361 பேர் கைது
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் 1077 பேருக்கு மேற்கொண்ட விரைவு அன்டிஜன் சோதனையில் 19 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கொழும்பு மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாத 2025 பேர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைவாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,361 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri