வடக்கு - கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக முதல் முறையாக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு வவுனியா, வைரபுளியங்குளம் ஆதிவிநாயகர் பாலம்பிகை மண்டபத்தில் நேற்று (04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தலைவர் தெரிவு
இதன்போது, வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக சிவகுமார் திவியா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் பெண் ஒருவர் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக வருவது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் ஒரேயொரு பெண் ஊடகவியலாளர் அங்கத்துவம் வகித்த நிலையில் அதற்கான சந்தர்ப்பத்தினை ஏனைய ஊடகவியலாளர்கள் ஒருமித்து வழங்கியிருந்தார்கள்.
அத்துடன், சங்கத்தின் செயலாளராக சி.கஜேந்திரகுமார் அவர்களும், பொருளாளராக சிறிதரன் மனோஜ் அவர்களும், உபதலைவராக இராசையா ஜெய்சங்கர் அவர்களும், உப செயலாளராக வரதராசா பிரதீபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சங்கத்தின் ஆலோசகராக முன்னாள் தலைவர் சு.வரதகுமார் அவர்களும், கணக்காய்வாளராக இ.சற்சொரூபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 11 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri