சுவ செரிய சேவை தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு
சுவ செரிய நோயாளர் காவு வாகன சேவையின் செயல்திறன், ஒரு புதிய முயற்சியின் கீழ் விரிவுபடுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள சுவ செரிய அம்பியுலென்ஸ் சேவை தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
ஊழியர் வெற்றிடங்கள், பயிற்சி தேவைகள் மற்றும் நிதி கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் மூலம், குறித்த வாகன சேவையை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை
முதலில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக ஆரம்பிக்கப்பட்ட சுவ செரிய இப்போது இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக இயக்கப்படுகிறது.
தற்போது, சுவ செரியா இலங்கை முழுவதும் 322 நோயாளர் காவு வாகனங்களை இயக்குகிறது. இந்த சேவை தினமும் 5,000 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளைக் கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
