முரண்பாடு காரணமாக காதலனை கொடூரமாக கொலை செய்த பெண்
மொனராகலை - வெல்லவாய பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது 31 வயதுடைய காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
உயிரிழந்த நபர், நாவலப்பிட்டியைச் சேர்ந்த திருமணமானவர் என்பதுடன் 19 வயதுடைய இளம் பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவருடன் சேர்ந்து வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப்பெண் நபரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதன்போது, தாக்குதலுக்குள்ளான நிலையில் நபர், வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri