வைரல் காணொளியால் சிக்கிய 19 வயது இளைஞர்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பொதுமக்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய காணொளி ஒன்றை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைது நடவடிக்கை நேற்று(08.03.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
19 வயது இளைஞர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரு இளைஞர்கள் வீதியில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி, ஏனைய பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அந்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நவகத்தேகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நேற்று(08) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், நவகத்தேகம பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாரதிராஜாவுக்கு தனது அஞ்சலியை செலுத்திய முதலமைச்சர் விஜய்.. அரசு மரியாதையுடன் இறுதி பயணம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan