ஈரான் மோதலால் உலகளாவிய மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கையில் அதிரடி மாற்றம்!
ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகின் முக்கிய மத்திய வங்கிகள் தங்களது நிதிக் கொள்கைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், வெளிநாட்டு செய்தி தாள் ஒன்றில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் மந்தநிலை
இது ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பணவீக்கத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

இதன் விளைவாக, வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டிருந்த பல நாடுகள், தற்போது அந்த முடிவை நிறுத்தி வைத்துவிட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காக்கப் புதிய உத்திகளை வகுத்து வருகின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த நிச்சயமற்றத் தன்மை, உலகளாவிய பங்குச் சந்தைகளிலும் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதால், எதிர்வரும் மாதங்களில் உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.