இலங்கையில் தொடரும் கோவிட் - 19 மரணங்கள்! இன்றும் ஐவர் பலி
நாட்டில் கோவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் ஐந்து கோவிட் - 19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவர், அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா, நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் கடந்த 5ம் திகதி உயிரிழந்துள்ளார். சுவாசப் பிரச்சினை மற்றும் கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் கடந்த ஜனவரி மாதம் 28ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.






படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
