வடக்கு மாகாண அனர்த்த நிவாரணத்திற்கு 1872 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ் - கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழு நாட்டுக்கும் சுமார் 10,290 மில்லியன் ரூபாவை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள நிலையில், பாதிப்பு குறித்த தரவுகளின் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பிரதேச செயலகங்கள் ரீதியாக இந்த நிதி பங்கீடு செய்யப்படவுள்ளது.

இதில் வடக்கு மாகாணத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணத்துக்கு 365 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சிக்கு 206 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவுக்கு 189 மில்லியன் ரூபாவும், வவுனியாவுக்கு 158 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உயிர் இழப்புகள் குறைவாக இருந்தாலும், விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், மன்னாரில் மட்டும் சுமார் 15,000 கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri