இளம் வயதில் தகாத உறவில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பிணியாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (08.08.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்த நிலையில் சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் ஒன்றிணைத்து வைத்துள்ளனர்.
தலைமறைவு
இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் பிரகாரம், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞனுக்கு எதிராக கடந்த (01.08.2023)ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |