முகநூலில் தவறான தொழிலை ஊக்குவித்த இளைஞர் கைது
சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் இணையக்கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் பல சமூக ஊடகக்குழுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களை பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்து
மேலும், அவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமூக விரோத பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பல சமூக ஊடகக்குழுக்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குழுக்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை பற்றியே திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.
குறித்த விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமூக ஊடகக்குழுவை நடத்தி வந்த ஒருவர் வெயங்கொட பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24