ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 18 பெண்களுக்கு கோவிட் தொற்று உறுதி
பதுளை ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்ரத்மலை,தொட்டலாகலை, தம்போதென்ன ஆகிய தேயிலைத் தோட்டங்களில் வசித்து வரும் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 18 பெண்களுக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இந்த பெண்கள் ஹப்புத்தளையில் இருந்து பலாங்கொடைக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி ஆடைத் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பேருந்தில் பயணித்த 18 பெண்களுக்கு கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
33 பெண்களுக்கு இந்த பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த கோவிட் தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri