பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று(03.12.2024) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்காலைச் சேர்ந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் ஒரு படகில் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதிமன்றம்
மேற்படி, 18 இந்திய கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 14 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
