யாழில் மாமனிதர் ரவிராஜின் 17 ஆவது நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு (Photos)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று (10.11.2023) வெள்ளிக்கிழமை காலை, யாழ். தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள அவரது நினைவுச் சிலை முன்பாகவே நடைப்பெற்றது.
மாமனிதருக்கு அஞ்சலி
இதன்போது மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்.
மற்றும் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன்,
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர், ரவிராஜின்
உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டால் இதுவே நடக்கும்: விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் பகிரங்க அறிவிப்பு
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான கொலைக் குற்றச்சாட்டு : 16 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள்(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |