இஸ்ரேல் தேர்தல்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்
இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள 'ஹோஸ்டேஜஸ் சதுக்கத்தில்' பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2023, ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான சுதந்திரமான விசாரணை சபை அமைக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
குறித்த தாக்குதலில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் உருவாக்க அமைக்கப்பட்ட ஒக்டோபர் கவுன்சில் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டம்
நெதன்யாகுவின் முக்கிய எதிரணியைச் சேர்ந்த 'யாஷார்' கட்சியின் தலைவர் காடி ஐசன்காட் மற்றும் 'டெமாக்ரட்ஸ்' கட்சியின் தலைவர் யாயிர் கோலன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சுயாதீன விசாரணை ஆணையத்தை உருவாக்க நெதன்யாகுவின் அரசாங்கம் மறுத்து வருகிறது. மாறாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் குழுவை அமைக்க அரசு முன்வந்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( 27) இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2023 காசா போர் ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan