நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள்
இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் புதியதாக 175 பேர் தெளிவாகியுள்ளனர்.
இன்றைய தினம் பத்தாம் நாடாளுமன்றின் கன்னி அமர்வு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இவ்வாறு புதிதாக தெரிவானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 திகதிகளில் விசேட செயலமர்வு ஒன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற செயன்முறைகள், நிர்வாக நடவடிக்கைகள் போன்றவை குறித்து இந்த செயலர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தும் குறித்த தினத்தில் வழங்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோகினதீர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri