1700 ரூபா சம்பள உயர்வு ஒரு கபட நாடகம்: உண்மையை அம்பலப்படுத்தும் பெருந்தோட்ட தொழிலாளி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) ஆகியோர் 1700 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதி ஒரு கபட நாடகம் என பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிக்கமைய கட்டாயம் 1700 ரூபா வழங்கப்படும் எனவும் மேலதிக நிறைக்கு 80 ரூபா வழங்கப்படும் எனவும் கூறி இருந்தபோதிலும் இதுவரை எந்த வித மாற்றமும் நிகழவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு வழங்கிய வாக்குறுதியே 1700 ரூபா சம்பள உயர்வு விவகாரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |