செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி

COVID-19 Ceylon Workers Congress Ranil Wickremesinghe Senthil Thondaman
By Dhayani Jul 20, 2024 02:20 PM GMT
Report

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் பெருந்தோட்ட மக்கள்அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை ரூபாய்க்கு விரைவில் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்து

இலங்கை ரூபாய்க்கு விரைவில் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்து


செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி | 1700 As Salary For Plantation Workers

இடைக்கால நிவாரணம்

அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை குறித்து அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 5000 வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.

தற்போது 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபாய் வழங்க மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற ஆவணங்களை செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி | 1700 As Salary For Plantation Workers

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

இதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.


மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

பங்களாதேஷில் அமைதியின்மை: இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை

பங்களாதேஷில் அமைதியின்மை: இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை

கினிகத்தேனையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கினிகத்தேனையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மேலதிக தகவல் - கிருஸ்ணகுமார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US