அமெரிக்காவில் பனிப்புயலில் பலியோனோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
அமெரிக்காவின் பல பகுதிகளை பெரும் பனிப்புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் மின்சார வசதியின்றி அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூயார்க், டென்னிசி, லூசியானா, மாசாசூசெட்ஸ், கன்சாஸ், பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயலினால் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 10,000-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பாடசாலைகள் மற்றும் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இன்றயை தினம் பனிப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது, ஆனால் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தெற்கில் டெக்சாஸ் முதல் வடகிழக்கில் நியூ இங்கிலாந்து வரை காலநிலை சீர்கேடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவிலும் இந்த பனிப்புயல் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri