16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் மோசடியில் சம்பந்தம்: பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டு
ஒக்டோபர் 2024 மற்றும் ஒக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் தொடர்பான வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று பொதுப் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(08.0.2026) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்தக் காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இலஞ்சக் குற்றச்சாட்டு
ஊழல் என்பது முன்னாள் அரசியல் பதவியில் இருந்தவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கும் பரவியுள்ளது.

அரசியல்வாதிகளால் பணியமர்த்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் கூட இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.
4அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தற்போதைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே ஊழல் எதிர்ப்பு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்குக் காரணம். இலஞ்ச, ஊழல் விவகாரங்களைக் கையாள்வதில் நிறுவன ரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த முன்னேற்றங்கள் வெளிப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.