ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு

Gotabaya Rajapaksa Crime Money
By Rakesh Jun 27, 2026 01:41 AM GMT
Report

 வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபா அதிக்கூடிய சந்தை மதிப்புடைய அரிய இரத்தினக்கற்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று(26) புதிய முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 'சிவ் ஹெள பொது பவுர' அமைப்பின் மலியதேவ தேரர், இசுருமினியே சித்தார்த்த தேரர் மற்றும் முக்கிய சிவில் சமூக ஆர்வலரான துலான் சேனாதீர ஆகியோரால் இந்தப் புதிய முறைப்பாட்டுப் பத்திரம் சிஐடி தலைமையகத்தில் நேரில் கையளிக்கப்பட்டது.

சிறையில் நோயால் அவதிப்படும் விஜயதாச ராஜபக்சவின் மகன்..!

சிறையில் நோயால் அவதிப்படும் விஜயதாச ராஜபக்சவின் மகன்..!

ருவன்வெலிசாய மகா சாய விகாரை

இந்த விடயம் குறித்து முறைப்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் பல தசாப்த காலப் பழமைவாய்ந்த அசல் சூடாமணிக்கல் இரகசியமாகக் கழற்றப்பட்டு, அதற்குப் பதிலாக போலியான வேறொரு சூடாமணிக்கல் கோபுர உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத மாற்றத்தின் போது, அசல் சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான விலைமதிப்பற்ற அரிய இரத்தினக்கற்கள் அனைத்தும் முற்றாகத் திருடப்பட்டுள்ளன.

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு | 1500 Cr Gemstone Looted Ruwanweliseya Soodamanikal

அன்றைய காலகட்டத்தில் ருவன்வெலிசேய விகாரையின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பல்லேகம ஹேமரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்சமயம் பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி விளங்கும் பிரபல தொழிலதிபர் விரஞ்சித் தாம்புகல ஆகியோர் இணைந்து, தங்களுக்குள் இருந்த நெருங்கிய அரசியல் மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளைப் பயன்படுத்தியே இந்த மகா கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என முறைப்பாட்டில் நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆட்சிக் காலங்களில் இந்த விவகாரம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 'திருடனின் தாயிடம் மை போட்டுப் பார்ப்பது போல', சி.ஐ.டியின் அன்றைய பணிப்பாளர் முறைப்பாடு செய்த சிவில் சமூகப் பிரதிநிதிகளையே பழிவாங்கலாகக் கைது செய்து சிறையில் அடைத்திருந்ததாகச் சிவில் ஆர்வலர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

லசந்த- தாஜுதீன் - பிரகீத் கொலைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்! ஜனாதிபதியிடம் கேள்வி

லசந்த- தாஜுதீன் - பிரகீத் கொலைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்! ஜனாதிபதியிடம் கேள்வி

சூடாமணிக்கல்

மேலும், மகா சாயவின் அசல் சூடாமணிக்கல் அகற்றப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான தருணத்திலேயே, கோட்டாபய ராஜபக்ச ருவன்வெலிசேவுக்கு முன்னால் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார் என்றும், புனித இடத்துக்கு இழைத்த இந்தத் துரோகத்தின் காரணமாகவே இன்று அவர்களுக்குரிய கர்மவினை மிகச் சரியாகப் பலித்துள்ளது என்றும் அவர்கள் சாடினர்.

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு | 1500 Cr Gemstone Looted Ruwanweliseya Soodamanikal

தற்போது நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் புதிய அரசு பதவியில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முறைப்பாட்டாளர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த மக்களின் மிக உயரிய வழிபாட்டுத் தலத்தில் அரங்கேறியுள்ள இந்த விபரீத மோசடி குறித்து விரிவாக ஆராய, விசேட உளவுத்துறை அதிகாரிகள் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முடுக்கிவிடுமாறும், இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தராதரமிக்க குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறும் சிவில் அமைப்புகளும் மகா சங்கத்தினரும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கு! திரட்டப்படும் தொலைபேசி ஆதாரங்கள்

பல்லேகம ஹேமரத்ன தேரர் வழக்கு! திரட்டப்படும் தொலைபேசி ஆதாரங்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US