முஸ்லிம் விவாகரத்து சட்ட முன்மொழிவுகள் நிராகரிப்பு

Sri Lanka Politician Sri Lankan Peoples Wedding
By Sheron Aug 08, 2023 06:08 PM GMT
Report

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட, முஸ்லிம் விவாகரத்து சட்ட (MMDA) முன்மொழிவுகள் 150க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கல்விமான்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், ஊடகப் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளில், இஸ்லாமிய சட்டத்தை வழிநடத்தும் நீதி, இரக்கம் மற்றும் அமைதி ஆகிய இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறிப்பிடப்படவில்லை என்று குறித்த 150 பேரும் குறிப்பிடுகின்றனர்.

முஸ்லிம் விவாகரத்து சட்ட முன்மொழிவுகள் நிராகரிப்பு | 150 Rejections Of Muslim Divorce Law Proposals

முஸ்லிம் அடையாளத்துக்கு எதிரானது

“இந்த ஆவணத்தில் கையொப்பமிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட பின்தங்கிய நிலைப்பாடுகளால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். இந்த நிலைப்பாடுகள் ஷரீ ஆவில் பொதிந்துள்ள இரக்கம் மற்றும் அமைதி ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது.

இலங்கை அரசியலமைப்பை நிலைநிறுத்தும் இந்த முன்மொழிவுகள், இஸ்லாத்தின் அறிவொளி சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முஸ்லிம் அடையாளத்துக்கு எதிரானது எ‌ன்று‌ 150 பேரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னோக்கிச் செல்லும் சீர்திருத்தங்களில் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதன் மூலம் சமூகத்திற்கு உண்மையான தலைமைத்துவத்தை காட்டுமாறு, குறித்த அறிக்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.

அத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை நிராகரிக்குமாறும், முஸ்லிம் விவாகரத்து சட்டத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் நீதி அமைச்சர் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் 150 பேரும் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US