செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ் 150 உயிர்காக்கும் இதய சத்திர சிகிச்சை
செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ் 150 உயிர்காக்கும் இதய சத்திர சிகிச்சையை நிறைவு செய்ததை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (11) கொழும்பு லங்கா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. இந்த இருதய சத்திர சிகிச்சை மூலம் 150 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் பொறுப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகனை தெரிவித்து கொள்கின்றேன்.
150 இதய சத்திர சிகிச்சை மேற்கொண்டதை கொண்டாடும் இந்த தருணம் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என நான் எனது கனவிலும் நினைத்து பார்க்க வில்லை.
இடம்பெற்ற நிகழ்வுகள்
சுனாமியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எவ்வளவு உயிர்கள் பலி போனது என எமக்கு தெரியும். இத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்புடுத்துவதற்கு மூலகாரணமாக இருப்பவர்கள் கொடையாளிகள்.
இவர்கள் தான் உங்களுக்காக தானத்தை தருபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதய சத்திர சிகிச்சைக்கான தேடல் குறித்த காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
அத்தோடு இந்த சேவையில் உதவி செய்த வைத்தியர்கள் , தாதியர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் பொறுப்பாளர் செந்தில் குமரன், வைத்தியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.