மட்டக்களப்பில் 15 வயது சிறுமி வன்புனர்வு:18 வயது இளைஞன் கைது
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 15வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் நேற்று (26.08.2023) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனை
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 வயதுடைய இளைஞன் குறித்த சிறுமிடன், காதல் உறவில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யபட்டதுடன் பாதிப்புக்குள்ளான சிறுமி பொலிஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் வாழைச்சேனை
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபட்டதையடுத்து எதிர்வரும் 7ம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
