முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய இளைஞன் தொடர்பில் விசாரணை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய இளைஞன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியினை கைவேலி பகுதியினை சேர்ந்த குறித்த இளைஞன் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவைத்திய பரிசோதனை
இதற்கமைய 22.10.2024 குறித்த சிறுமி அழைத்துவரப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியினை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய கைவேலி பிரதேச இளைஞனை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri