மர்மமான முறையில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுவன்: பொலிஸார் விசாரணை
பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆராவல கொஸ்கஹஹேன பகுதியைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தாய் உயிரிழந்ததையடுத்து கலானா தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
தாயின் உயிரிழப்பை அடுத்து தனது மகன்(கலன) மனா அழுத்தத்தில் காணப்பட்டதாக அவரின் தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு, கலனின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதன்படி கலனவின் சகோதரி தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் கலன மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரி வீடு திரும்பிய போது கலன வீட்டில் இல்லாத காரணத்தினால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய பொலிஸார் சிறுவனை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
