தலவாக்கலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 15 தொழிலாளர்கள்
தலவாக்கலை- அக்கரபத்தன பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது.
பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சிகிச்சை
இந்த நிலையில், தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சிய 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
