இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 15 தாய்லாந்து பெண்கள்
இலங்கையில் சட்டவிரோதமான தங்கியிருந்து கொழும்பு நகரில் உள்ள 6 மசாஜ் நிலையங்களில் பணிப்புரிந்து வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 15 பெண்களை குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்களத்தின் விசாரணைப்பிரிவினர் சுற்றிளைப்புகளில் கைது செய்துள்ளனர்.
நாடு கடத்தப்படும் வரை வெலிசரையில் தடுத்து வைப்பு
கல்கிஸ்சை, கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இயங்கி வரும் 5 மசாஜ் நிலையங்களில் பணிப்புரிந்து வந்த 5 தாய்லாந்து பெண்கள் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் 30 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு ஹெவ்லொக் வீதியில் தும்முல்ல சந்தி பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் ஒன்றில் பணிப்புரிந்து வந்த 10 தாய்லாந்து பெண்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 33 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் கடந்த நவம்பர் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டை சேர்ந்த இந்த 15 பெண்களை நாடு கடத்தும் வரை வெலிசர தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இந்த பெண்கள் தாய்லாந்து நாடு கடத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
