இன்டெர் பார்லிமென்ட் யூனியன் இன் 144 ஆவது அமர்வு ஆரம்பம்: கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்கிறார் சாணக்கியன்
இன்டெர் பார்லிமென்ட் யூனியன்இன் 144 ஆவது அமர்வானது இந்தோனேசியாவின் பாலியில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த அமர்வில் பங்கேற்கும் வகையில் இலங்கை நாடாளுமன்ற குழுவானது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அங்கு சென்றுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் தொடர்பான பல விடயங்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் உலகப்
பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள்
இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
