காசாவை சுற்றி வளைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் : 141 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் மேலும் 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசா சுகாதார அமைச்சகம்
இந்நிலையில் காசா பகுதியில் இவர்களை சேர்த்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளதாகவும், 88 ஆயிரத்து 800 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் காசா போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நீடித்து வருவதோடு, ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக காசாவிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam