கொலை முயற்சிக்கு பின்னர் மீண்டும் பொதுவெளியில் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் பொதுவெளியில் பிரச்சாரத்திற்காக தோன்றினார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டு இருந்த போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூட்டக்கு இலக்கானார்.
இந்த தாக்குதலில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கொலை முயற்சி
இந்நிலையில் கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது தனது பிரச்சார உரை முற்றிலும் மாறியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உரை நாட்டிற்கு, உலகிற்கும் ஒருமைப்பாட்டின் செய்தியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
