பாடசாலை மாணவனின் பரிதாப மரணம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் மரணம் தொடர்பில் கைதான ஜவருக்கு எதிராக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(05.04.2024) சந்தேகநபர்கள் முன்னிலைபடுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த ஜவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
“நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் 14 வயது மாணவன் கடந்த சனிக்கிழமை(03.02.2024) உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் முருகன் அஷால் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உயிரிழந்த மாணவன் சிகையலங்கார நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
இதையடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், இதன் போது இடைவழியில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (05.02.2024) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு விளக்கமறியல்
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் முறையற்ற வகையில் மரம் வெட்டிய 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த ஜவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |