குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலை அனுமதி
பொகவந்தலாவயில் குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(20) கொட்டியாகல தோட்டப் பிரிவில் பதிவாகியுள்ளது.
கொட்டியாகல பிரிவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போதே தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களைக் குளவி கொட்டியுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் 35 வயது தொடக்கம் 53 வயது உடையவர்கள் என்று வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



