இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் குழு!
வலுக்கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு,இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை அதன் 29வது அமர்வை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த குழு, மொண்டினீக்ரோ, பெனின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலைமைகளை மதிப்பாய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பாய்வுகள்
இந்த அமர்வு பொதுக் கூட்டத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான முதல் உலக மாநாட்டின் காணொளி என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்தநிலையில் இலங்கை தொடர்பில் செப்டம்பர் 26 ஆம் திகதியன்று முற்பகல் 10:00 முதல் 1.00 வரையிலும் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 வரையிலும் மதிப்பாய்வுகள் நடத்தப்படவுள்ளன.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri