இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: 14 பாகிஸ்தானியர்கள் கைது
இலங்கைக்கு 600 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிவந்த பாகிஸ்தான் மீன்பிடி கப்பலுடன் 14 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பாகிஸ்தான் கப்பலான அல் ரஸாவில் இருந்த அனைவரும் பலுசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் 78 பொதிகளில் 86 கிலோ ஹெரோயின் அடைக்கப்பட்டிருந்ததுடன், போதைப்பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கையிருப்பு
இந்த போதைப்பொருள் கையிருப்பு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், இலங்கைக்குள் கொண்டு செல்லும் நோக்கில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கைக்காக கண்காணிப்பு விமானங்களையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பஹிதாருக்கு அழைத்து செல்லபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
