மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கையெழுத்திட்டு அனுப்பட்ட ஆவணத்தை ஏற்க முடியாது! : இன்பம்
மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் கையெழுத்திட்டு அனுப்பட்ட ஆவணத்தை ஏற்க முடியாது என வடமராட்சி பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்பின் தலைவர் இன்பம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகின்றவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் எனவும் அதற்காக ஒன்றுபட்டு 13ஐ நிராகரிக்கின்ற செயற்பாட்டிற்கு அணிதிரள்வோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
13ஐ நிராகரிக்கின்ற விதமான செயற்பாட்டில் மக்களும் கைகோர்க்க வேண்டும். இல்லையென்றால் நமது தலைவிதி எம்மைவிட்டு கைமாறிச் சென்றுவிடும். அத்துடன் எமது அபிலாசைகள் நிறைவேற்றாத நிலைமைக்கு தள்ளப்படும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.



