பௌத்த பிக்குவை போன்று வேற்று மத தலைவர்களால் செயற்பட முடியுமா! சபையில் சாணக்கியன்-செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசியலமைப்பின் ஒரு பகுதியான 13வது திருத்தச் சட்டத்தை எரித்த பிக்குவிற்கு எதிராக 21 குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு 21 வழக்குகள் உள்ள ஒரு புத்த பிக்கு நாடாளுமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை எரித்த போது கைகட்டி வேடிக்கை பார்த்த அரசாங்கம் வேறு மதத்தலைவர்கள் வெற்று காகிதத்தை எரித்திருந்தால் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பார்கள் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 13வது திருத்தச்சட்டம் என்ற ஒன்றை பேசுபொருளாக்கியுள்ளதற்கு காரணம் அரசியல் அனாதைகள் வெறுங்கையுடன் செல்லாது எதையாவது ஒரு கோசத்தை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவே என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
