13 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் புதைபடிவத்திற்கு ஷகீராவின் பெயர்
கொலம்பியாவில் ஆராய்ச்சியாளர்கள் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆமை புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆமையின் புதைபடிவத்திற்கு உலகப் புகழ்பெற்ற கொலம்பிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடனக் கலைஞரான ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகளால் இந்த 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆமை புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷகீராவின் இரசிகர்கள்
இந்த புதைபடிவம் ஒரு மண்டை ஓடு மற்றும் ஆமையின் முழுமையான ஓடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், மற்றும் கிராமி விருது பெற்ற பாடகி ஷகிராவின் நினைவாக, குறித்த புதைபடிவத்திற்கு ஷகீராவின் தீவிர இரசிகர்கள் அவரின் பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய பழங்காலவியல் தளங்களில் ஒன்றான டாடகோவா பாலைவனத்தில் உள்ள லா விக்டோரியாவில் இந்தப் பழங்கால புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது மியோசீன் சகாப்தத்தின் ஒரு பார்வையை வழங்குகிறது, அப்போது அந்தப் பகுதி ஏரிகள் மற்றும் ஆறுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |