13 தொடர்பில் மீண்டும் சர்வ கட்சி மாநாடு: மொட்டு விடுத்துள்ள கோரிக்கை
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது.
அதற்கான அழைப்பு சர்வ கட்சிகளுக்கும் நேற்று (02.08.2023) அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி அதிகாரத்தை வழங்கியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை
அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வாரக் கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி சர்வ கட்சி மாநாடு மீண்டும் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி 13ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற முன் மொட்டுவின் ஆதரவைப் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
13ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இணக்கம் இல்லை என்றும் ஜனாதிபதி மொட்டுவின் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்த பின் ஐக்கிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri